காணவில்லை என தேடிய குழந்தை கழிவுக் குழிக்குள் சடலமாக மீட்பு : தாய் வீடொன்றில் பணிப் பெண், தந்தையின் அசமந்தம்? - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

காணவில்லை என தேடிய குழந்தை கழிவுக் குழிக்குள் சடலமாக மீட்பு : தாய் வீடொன்றில் பணிப் பெண், தந்தையின் அசமந்தம்?

இரண்டரை வயது ஆண் குழந்தையொன்று கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக பலியான பெருந்துயர் சம்பவமொன்று மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் ஜனதா டிவிசனில் இடம்பெற்றுள்ளது.

ஜெயசுந்தரம் சுலக்‌ஷனன் என்ற குழந்தையே இவ்வாறு பலியாகியுள்ளது.

குழந்தை திடீரன நேற்று (29) செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில் காணாமல் போனதையடுத்து, அக்குழந்தையை தேடும் பணி இடம்பெற்றது. இதன்போது வீட்டுக்கு அருகில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த சாணிக் குழியில் இருந்து குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரி திருமதி லெச்சுமி தலைமையில் மரண விசாரணைகள் இடம் பெற்று சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதணைக்காக சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தையின் தாய் குருணாகல் பகுதியிலுள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப் பெண்ணாக தொழில் புரிகின்றார் எனவும், தந்தையின் அரவணைப்பிலேயே குழந்தை வளர்ந்துள்ளது எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவமானது மஸ்கெலியா தோட்டப் பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

(கே. கிரிஷாந்தன், எம். கிருஸ்ணா)

No comments:

Post a Comment