செ.தேன்மொழி
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிகிச்சைக்காக கராபிட்டி வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு, மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர், ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் சிறை வைக்கப்பட்டுள்ள, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று சனிக்கிழமை கராபிட்டி வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டார்.
வைத்தியரின் ஆலோசனைக்கமைய சிகிச்சைக்காகவே இவர் இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
சிறைச்சாலை அதிகாரிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் அவரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்திருந்ததுடன், அவருக்கான சிகிச்சைகள் முடிவுற்றதும், அவர் மீண்டும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment