பசளை விநியோகத்தை தொடர்ந்தும் வழங்கக்கோரி கிண்ணியா விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 19, 2021

பசளை விநியோகத்தை தொடர்ந்தும் வழங்கக்கோரி கிண்ணியா விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்

விவசாயிகளுக்கான பசளை விநியோகத்தை உடனடியாக நிறுத்தாமல் தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று (19.06.2021) பாதிக்கப்பட்ட கிண்ணியா பீங்கான் உடைந்தாறு விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் செய்தனர்.

இரசாயன பசளை பயன்பாட்டுக்கு பழக்கப்பட்ட விவசாயிகள் உடனடியாக சேதனப் பசளை பாவனைக்கு நிர்ப்பந்திக்கப்படுவது ஆரோக்கியமான விடயமல்ல.

விவசாயத்தை தமது ஜீவனோபாய தொழிலாக செய்து வருவதோடு இரசாயனப் பசளைகளை பயன்படுத்தி வந்த விவசாயிகள் தற்போது தங்களுக்கான பசளைகளைப் பெற முடியாது விவசாய நடவடிக்கைகளை கைவிட வேண்டிய துர்பாக்கிய நிலையை அடைந்துள்ளனர்.

சேதனப் பசளை பயன்படுத்தும் முறைகளை படிப்படியாக விவசாயிகளுக்கு பலக்கத்தை ஏற்படுத்தி விட்டு இறக்குமதியை குறைக்க முடியும்.

அத்தோடு எரிபொருள் விலை ஏற்றமும் விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளில் பாரிய தாக்கத்தைச் செலுத்துகிறது. அதிலும் ஒரு நிதானமான போக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் இதன் போது கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment