(எம்.மனோசித்ரா)
இலங்கையில் முக்கியத்துவமுடைய பல கட்டடங்களை அரசாங்கம் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றமை உண்மைக்கு புறம்பானதாகும். பிரயோசனம் மிக்க வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது திட்டமிட்ட வகையில் அவை தொடர்பில் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் முக்கியத்துவமுடைய பல கட்டடங்களை அரசாங்கம் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
இலங்கையில் தற்போது உபயோகிக்கப்படாத பாழடைந்துள்ள பல கட்டடங்களை இனங்கண்டு அவற்றை மீள்புனரமைத்து அவற்றை வருமானம் ஈட்டக்கூடிய இடங்களாக மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தபால் திணைக்களத்தில் 45 அடி பரப்பளவில் நூதனசாலை அமைப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வாறான பிரயோசனம் மிக்க வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது திட்டமிட்ட வகையில் அவை தொடர்பில் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
No comments:
Post a Comment