ஸ்புட்னிக் தடுப்பூசியை ஒருமுறை வழங்கினால் போதும் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

ஸ்புட்னிக் தடுப்பூசியை ஒருமுறை வழங்கினால் போதும் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

(எம்.மனோசித்ரா)

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை முதற்கட்டமாக மாத்திரம் வழங்குவது போதுமானதாகும் என்று அதனை தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை முதற்கட்டமாக மாத்திரம் வழங்குவது போதுமானதாகும் என்று தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது. 

முதற்கட்டமாக ஒரு தடுப்பூசியை மாத்திரம் வழங்குவதில் திருப்தியடைய முடியும் என்று குறித்த தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தின் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தினால் இரண்டு தடுப்பூசிகளில் முதலாம் கட்டமாக வழங்கப்படும் தடுப்பூசியை 'ஸ்புட்னிக் லைட்' என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் நாட்களில் இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கக்கூடும்.

இது தொடர்பில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தினால் எமக்கு அறிவித்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. எனவே இது எம்மால் தீர்மானிக்கப்படும் விடயமல்ல. தயாரிப்பு நிறுவனமும், ஆய்வூகூடங்களுமே அவற்றை தீர்மானிக்கும் என்றார்.

No comments:

Post a Comment