அமெரிக்காவில் பெற்றோரை இழந்த 43 ஆயிரம் குழந்தைகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

அமெரிக்காவில் பெற்றோரை இழந்த 43 ஆயிரம் குழந்தைகள்

கொரோனா வைரசால் கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவர், பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர் என எங்கு பார்த்தாலும் சோகமாக இருக்கிறது.

கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் ஏராளமான மக்களின் உயிரை பறித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு இழப்பு உள்ளது.

கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவர், பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர் என எங்கு பார்த்தாலும் சோகமாக இருக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல நாடுகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது. அமெரிக்காவிலும் பல வீடுகளில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அங்கு 43 ஆயிரம் குழந்தைகள் தாய், தந்தை இருவரையுமோ அல்லது அவர்களில் யாராவது ஒருவரையோ இழந்திருக்கிறார்கள்.

அதிலும் கருப்பின சமூகத்தினரிடம்தான் இழப்பு அதிகமாக இருக்கிறது. அமெரிக்க குழந்தைகளில் கருப்பின குழந்தைகளின் எண்ணிக்கை 14 சதவீதமாகும். ஆனால் பெற்றோரை இழந்த குழந்தைகள் என்று கணக்கிட்டு பார்த்தால் 20 சதவீத கருப்பின குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment