இரு நாடுகள் புறக்கணித்த கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியது தவறு - இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

இரு நாடுகள் புறக்கணித்த கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியது தவறு - இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர

(எம்.மனோசித்ரா)

இரு நாடுகளால் புறக்கணிப்பட்ட கப்பலுக்கு இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டது தவறாகும். துறைமுக அதிகார சபை ஏன் அனுமதி வழங்கியது? இது தவறானதொரு செயற்பாடாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளில் அநாவசிய பிரச்சினையை உருவாக்கியுள்ளனர். இவ்வாறு அபாயம் மிக்க கப்பலுக்கு எதற்காக அனுமதி வழங்கப்பட்டது என்று துறைமுக அதிகார சபையிடம் கேள்வியெழுப்புகின்றோம்.

ஏனைய துறைமுகங்களால் நிராகரிக்கப்பட்ட இந்த கப்பலுக்கு எதற்காக இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டும். காரணம் நாட்டின் பாரிய கடற்பரப்பு இதன் காரணமாக மாசடைந்துள்ளது. இது தவறான ஒரு விடயமாகும். எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

இது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கான நேரம் கிடைக்கவில்லை. எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் எமது நிலைப்பாடுகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment