ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 21, 2021

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டமும் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.

போட்டி கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது. முதல் நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட 2 ஆவது நாள் போட்டி நடைபெற்றது.

நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்ய, இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி 64.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களை எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் முன்னதாகவே நிறைவுக்கு வந்தது.

நேற்றுமுன்தினம் 3 ஆவது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 92.1 ஓவரில் 217 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

அதன்பின் நியூசிலாந்து முதல் இன்னிங்ஸை தொடங்கியது. நியூசிலாந்து 49 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ஓட்டங்களை எடுத்திருந்தபோது மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் முதல் நாள் ஆட்டம் போலவே நேற்றைய நான்காம் நாள் ஆட்டமும் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் கைவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment