செ.தேன்மொழி
கம்பஹா - பெம்முல்ல பகுதியில் போலி நாணயத்தாளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெம்முல்ல பகுதியில் வர்த்தக நிலையமொன்றுக்கு வந்த நபரொருவர் 5000 ரூபாய் நாணயத்தாளை வழங்கி, அதற்கு பதிலாக சில்லரை காசுகளை பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நாணயத்தாள் போலியானது என அறிந்து கொண்டுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கம்பஹா பொலிஸார், சி.சி.டி.வி காணொளி காட்சிகள் ஊடாகவும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர் பயணித்த காரின் இலக்கத்தை அறிந்து கொண்ட பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
மிரிஸ்வத்த பகுதியில் வைத்தே 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த காரை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன், சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment