24 மணி நேரமும் தொடர்ந்து சுத்தமான குடிநீரை வழங்குவதே எமது குறிக்கோள் - அமைச்சர் வாசுதேவ - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

24 மணி நேரமும் தொடர்ந்து சுத்தமான குடிநீரை வழங்குவதே எமது குறிக்கோள் - அமைச்சர் வாசுதேவ

அமீன் எம் ரிழான் 

24 மணி நேரமும் தொடர்ந்து சுத்தமான குடிநீரை வழங்குவதே எமது குறிக்கோள். குடிநீரை வழங்கும் போது பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீரை வழங்குவதை உறுதி செய்வதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, இது குறித்து நாங்கள் விசேட கவனம் செலுத்தி சுத்திகரிப்பு இயந்திரங்களை உற்பத்தி செய்வோம் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நானாயக்கரா தெரிவித்தார்.

ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மேலும் கருத்து தெறித்த அமைச்சர், கொலன்னாவ அரசுக்கு சொந்தமான தொழிற்சாலையின் ஊடாக நாட்டிற்குத் தேவையான அனைத்து சுத்திகரிப்பு இயந்திரங்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். வெளிநாட்டு நிதிகளை எதிர்பார்ப்பதை நாம் படிப்படியாக குறைக்க பணியாற்றி வருகிறோம். 

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் இந்த நேரத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. ஆனால் எதிர்காலத்தில் அவற்றை இரத்து செய்து உள்நாட்டு நித்தியங்களுக்கு மாற்ற முடியும். கரணம், டொலர்கள் மூலம் கடன்களை மீள செலுத்துவது எங்களுக்கு கடினமானது. கடன்களை ரூபாயின் மூலம் மீள செலுத்துவது எளிதானது. இது இந்த நாட்டிற்கும் நல்லது. நமது பொருளாதாரத்திற்கும் வலிமையானது.

எதிர்கால ஒப்பந்தங்கள் அனைத்தும் உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் மூலம் செய்யப்பட வேண்டும் என்பது எமது நோக்கமாகும். நீர் வழங்கல் சபையில் உள்ள உள்நாட்டு பொறியியலாளர்களால் பல்வேறு நீர் வழங்கல் திட்டங்களைத் தயாரித்த பின்னர், உள்ளூர் ஒப்பந்தக்காரர்களால் அவற்றை நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுடன், அவை ஏற்கனவே செயற்படுத்தப்பட்டும் வருகின்றன. அவர்கள் குழாய்களை பொருத்துதல், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், நீர் வழங்கும் இடங்களை உருவாக்குதல் போன்ற அனைத்து வேலைகளையும் செய்வார்கள் என்பது எமது நம்பிக்கையாகும்.

தேவையான எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் உள்நாட்டில் காணப்படுவதால், இந்த பணத்தை கிராமத்தில் உள்ள நமது இலங்கை தொழிலாளர்கள் மத்தியில் சென்றடைய செய்வது நாட்டிற்கு மிகவும் பயனளிக்கும் என்பது இதன் சிறப்பம்சமாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment