சோமாலியாவில் ராணுவ பயிற்சி முகாமில் வெடிகுண்டு தாக்குதல் : 15 பேர் பலி, 20 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 16, 2021

சோமாலியாவில் ராணுவ பயிற்சி முகாமில் வெடிகுண்டு தாக்குதல் : 15 பேர் பலி, 20 பேர் காயம்

சோமாலியாவில் ராணுவ பயிற்சி முகாமில் வெடிகுண்டு வெடித்ததில் 15 பேர் பலியானதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

மொகடிஷுவில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் ஆள்சேர்ப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் நேற்று ஆள்சேர்ப்பு பணி நடைபெற்றது. முகாமிற்கு வெளியில் செக் போஸ்ட் உள்ள பகுதியில் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் குறைந்தது 15 பேர் உயிரழந்திருக்கக் கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் அல் ஷபாத் என்ற அமைப்பு தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இத்தாக்குதலில் ராணுவத்தில் சேர்வதற்காக வந்தவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயம் அடைந்துள்ளனர் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment