சீனாவின் தடுப்பூசிக்கு அனுமதியளித்தது உலக சுகாதார ஸ்தாபனம் - WHO அனுமதி பெறும் 6ஆவது தடுப்பூசி - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

சீனாவின் தடுப்பூசிக்கு அனுமதியளித்தது உலக சுகாதார ஸ்தாபனம் - WHO அனுமதி பெறும் 6ஆவது தடுப்பூசி

கொவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்த, சீன தயாரிப்பு Sinopharm (சினோபார்ம்) தடுப்பூசியின், உலகளாவிய ரீதியிலான அவசர பயன்பாட்டுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (07) பிற்பகல். உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனாம் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் அதன் ட்விற்றர் கணக்கில் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பாதுகாப்பு, செயற்றிறன், தரம் ஆகிய உறுதிப்பாட்டை பெற்ற, 6ஆவது கொவிட்-19 தடுப்பூசியாக சினோபார்ம் விளங்குகிறது.

இதேவேளை, சீனாவினால் கடந்த மார்ச் 31ஆம் திகதி, இலங்கைக்கு 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள், அன்பளிப்பு செய்யப்பட்டதோடு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதனை சீனத் தூதுவரிடமிருந்து உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டார்.

அந்த வகையில், இலங்கையில் உள்ள சீனர்களுக்கு. அத்தடுப்பூசி வழங்கப்பட்டதுடன், இலங்கையர்களுக்கு அதனை வழங்குவதற்காக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதிக்காக இலங்கை காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment