(செ.தேன்மொழி)
மிரிஹான பகுதியில் தனியார் பஸ் முச்சக்கர வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு 8.10 மணியளவில் தனியார் பஸ் காரொன்றுடன் மோதி வீதியைவிட்டு விலகி, முச்சக்கர வண்டியுடன் மோதி பின்னர் மதில் ஒன்றின் மீதும் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விபத்தின் போது முச்சக்கர வண்டி சாரதியும், அதில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சாரதியும், பயணி ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்புதளை மற்றும் நுகேகொட ஆகிய பகுதியைச் சேர்ந்த 30, 54 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் தனியார் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment