பைசர் தடுப்பூசியை இலங்கையில் அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

பைசர் தடுப்பூசியை இலங்கையில் அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி

(எம்.மனோசித்ரா)

பைசர் கொரோனா தடுப்பூசியை நாட்டில் அவசர தேவைக்காக பயன்படுத்த ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய 05 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டாம் கட்டத்தின் கீழ் 1,50,000 இற்கும் மேற்பட்டோருக்கு அஸட்ரசெனிகா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் 6 இலட்சம் தடுப்பூசிகள் இதற்கு தேவைப்படுகின்றன.

அதற்கமைய தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முதலாம் கட்டத்தில் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு 12 முதல் 16 வாரங்களுக்குள் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment