Ceylon Black Tea போர்வையில் மீள் ஏற்றுமதிக்குத் தயாரான 200 மில்லியன் சிகரட்டுகளுடன் 21 கொள்கலன்கள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

Ceylon Black Tea போர்வையில் மீள் ஏற்றுமதிக்குத் தயாரான 200 மில்லியன் சிகரட்டுகளுடன் 21 கொள்கலன்கள் மீட்பு

இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு Ceylon Black Tea அனுப்பும் போர்வையில் மீள் ஏற்றுமதிக்காக 21 கொள்கலன்களில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஒன்பது பில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகளை சுங்கத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

21 கொள்கலன்களிலும் சுமார் 200 மில்லியன் சிகரட்டுகள் இருப்பதாகவும் இந்த இறக்குமதி தொடர்பில் முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களத்திள் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Enterpot trade என்ற சந்தையினூடாக மீள் ஏற்றுமதிக்காக இவ்வாறு 200 மில்லியன் சிகரட்டுகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவை ஐரோப்பிய நாடுகளுக்கு மீள ஏற்றுமதி செய்யப்படவிருந்துள்ளன.

இந்த மோசடி வர்த்தகர்கள் பெல்ஜியம், நெதர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு 12 கொள்கலன்கள் ஊடாக சிகரட்டுகளை அனுப்பியுள்ளதாகவும் இதுகுறித்து உரிய நாடுகளின் துறைசார் அதிகாரிகளிடம் வினவிய போது அவ்வாறு சிகரட்டுகள் அனுப்பப்படவில்லையென அவர்கள் கூறியதாகவும் சுங்கத் திணைக்களம் கூறியுள்ளது.

இதன் காரணமாக இது சர்வதேச வர்த்தக வலைப்பின்னலா? என சர்வதேச சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் அந்தந்த நாடுகளில் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகளை நடத்த இலங்கை சுங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் உதவி பணிப்பாளர்களின் ஆலோசனையின் இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் நிசாந்தன்

No comments:

Post a Comment