நாடு முழுவதும் கடும் மழை ; இலங்கையின் வடக்கை தாக்கும் சூறாவளி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

நாடு முழுவதும் கடும் மழை ; இலங்கையின் வடக்கை தாக்கும் சூறாவளி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சவுதி அரேபிய கடற்பரப்பில் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக சூறாவளி உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் சில தினங்களில் இந்த தாக்கம் தீவிரம் பெற்று இலங்கையின் வடக்கு மேற்கு நோக்கி கடக்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தாழமுக்கம் தீவிரம் பெற்ற சூறாவளி இலங்கையின் வடக்கு மேற்கு நோக்கி திசையூடாக கடக்கும். இதனால், அடுத்து வரும் சில தினங்களில் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வரையும், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையுள்ள கரையோரப்பிரதேசங்களில் கடல் சற்றுக் கொந்தளிப்பாக இருக்கும்.

இந்த நாட்களில் குறிப்பிட்ட பிரதேசங்களில் கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயல்பட வேண்டும். இந்தக் கடற்பரப்புக்களில் கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு வரும்படி வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டின் தென், மேல் மற்றும் வட மேல் மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியுள்ளது.

மேல், சப்ரகமுக, மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை வேளைகளில் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுக, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம்.

வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 இலிருந்து 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

No comments:

Post a Comment