(எம்.எப்.எம்.பஸீர்)
பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் ஆலோசனைக்கு அமைய, முதல் பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபரான பிம்சானி ஜாசிங்க ஆராச்சி, உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஒம்பூட்ஸ்மன் (குறை கேள் அதிகாரி) பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பொலிஸ் தலிமையகம் இதனைத் தெரிவித்தது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவிடம் வினவிய போது, பொலிஸ் திணைக்களத்தை மீள கட்டமைக்கும் செயற்பாடுகளுக்கு அமைய பொலிஸ்மா அதிபரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், விரைவில் ஜா சிங்க ஆராச்சிக்கு வேறு ஒரு பதவி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிம்சானி ஜா சிங்க ஆராச்சின் கீழ் குறித்த ஒம்பூட்ஸ்மன் பிரிவில் சேவையாற்றிய ஏனைய அதிகாரிகளையும், வேறு ஒரு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் கடமைகளை முன்னெடுக்க பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment