கொரோனா சோதனை கருவிகளை கழுவி மீண்டும் விற்பனை செய்தோர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

கொரோனா சோதனை கருவிகளை கழுவி மீண்டும் விற்பனை செய்தோர் கைது

இந்தோனேசியாவில் நாசி குச்சியால் மேற்கொள்ளும் கொரோனா சோதனை கருவிகளை கழுவி மீண்டும் விற்ற குற்றச்சாட்டில் மருந்து நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீள் பயன்படுத்தப்பட்ட கருவிகளைக் கொண்டு மெடான் நகர விமான நிலையம் ஒன்றில் 9,000 பயணிகள் மீது கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பயணிகள் சார்பில் கிமியா பார்மா என்ற அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனம் வழக்கிற்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பெருந்தொற்று காரணமாக நாசி குச்சியால் மேற்கொள்ளும் கொரோனா சோதனை பல நாடுகளிலும் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.

வடக்கு சுமத்திராவில் மெடான் நகரில் உள்ள குவாலானாமு விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் இந்த மோசடி இடம்பெற்று வருகிறது என்று சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் பறப்பதற்கு பயணிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டி இருந்ததால் இந்த விரைவுச் சோதனை இடம்பெற்று வந்துள்ளது. இதற்கான சோதனைக் கருவிகளை கிமியா பார்மா மருந்து நிறுவனம் வழங்கியுள்ளது.

தமக்கு தவறான முறையில் சோதனை செய்யப்படுவதாக பயணிகள் முறையிட்டதை அடுத்தே பொலிஸார் இதுபற்றி விசாரணை நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment