கிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையமாக மாறிய இராணுவ முகாம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

கிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையமாக மாறிய இராணுவ முகாம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது.

இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளை கொண்டதாக அமையவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

200 படுக்கை வசதியுடன் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் சிகிச்சை நிலையமானது இன்று நள்ளிரவு முதல் பணிகளை ஆரம்பிக்கும் நிலையில் தயாராக உள்ளதாகவும், நாளை முதல் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிகிச்சை நிலையமானது கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாக கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளதுடன், கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடவுள்ளனர்.

மேலதிகமாக 30 படுக்கைகளை கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் இவ்வாறு கொவிட் சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் மேற்கொண்டது.

இதன் பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறித்த சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் கிருஸ்ணபுரம் பகுதியில் தொற்று நோயியல் சிகிச்சை நிலையம் உருவாக்கப்பட்டு அங்கு கொவிட் சிகிச்சைகள் இடம்பெற்ற வருகின்றது.

இந்த நிலையில் அதிகரித்துவரும் கொவிட் தொற்று காரணமாக இலகுபடுத்தலிற்காக குறித்த சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment