நடிகைகளான ஆண்ட்ரியா, தீபிகா படுகோனே, கேபிரில்லா மூவருக்கும் கொரோனா...! - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

நடிகைகளான ஆண்ட்ரியா, தீபிகா படுகோனே, கேபிரில்லா மூவருக்கும் கொரோனா...!

நடிகைகளான ஆண்ட்ரியா, தீபிகா படுகோனே, கேபிரில்லா ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில், தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகை மட்டுமல்லாமல் இவர் சிறந்த பாடகியும் ஆவர். 

நடிகை ஆண்ட்ரியா ‘வடசென்னை’ ‘தரமணி’ போன்ற படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘பிசாசு 2’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையிலேயே, நடிகை ஆண்ட்ரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளதாவது “கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. என்னை கவனித்துக் கொண்ட நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி. தற்போது நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். நன்றாக குணமடைந்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் தீபிகா படுகோனே.

கொரோனா 2ஆவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல பொலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் தற்போது கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார்.

கடந்த ஒரு மாதமாக பெங்களூருவில் தனது பெற்றோருடன் தீபிகா படுகோனே வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தீபிகா படுகோனேவின் தந்தை பிரகாஷ், தாய் உஜ்ஜால, தங்கை அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் தீபிகா படுகோனேவுக்கு தற்போது பரிசோதனை செய்ததில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

தீபிகா படுகோனே கொரோனா தொற்றில் சிக்கி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

அத்துடன், நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளருமான கேபிரில்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேபிரில்லா. இதையடுத்து இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான '3' படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தினார். 

இதன் பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்த கேபி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது இவர் பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் கேபி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அதில் 'தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுதான் வந்தேன். ஆனாலும் கொரோனா பரிசோதனையில் பொசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. உங்களது அன்பிற்கு நன்றி. நான் நலமுடன்தான் இருக்கிறேன். தயவுசெய்து நீங்களும் பாதுகாப்புடன் இருங்கள், அன்பை மட்டுமே பரப்புங்கள் கொரோனாவை பரப்பாதீர்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment