பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

(இராஜதுரை ஹஷான்)

போதைப் பொருள் பாவனை, பாதாள குழுவினரது செயற்பாடுகளை இல்லாதொழித்தல் ஆகியவற்றுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். சமூக குழுக்களுக்கிடையில் தோற்றம் பெறும் முரண்பாடுகளுக்கு பொலிஸ் நிலையத்தின் ஊடாக தீர்வை பெற்றுக் கொடுப்பது சமூக பொலிஸ் சேவை இராஜாங்க அமைச்சின் நோக்கமாகும் என சமூக பொலிஸ் சேவை மற்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

சமூக பொலிஸ் சேவை இராஜாங்க அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சமூக பொலிஸ்' சேவைகள் இராஜாங்க அமைச்சு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும். பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த ஜனாதிபதி விசேட அமைச்சினை இவ்வாறு உருவாக்கியுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

போதைப் பொருள் பாவனை ஆரம்ப காலத்தில் நகர் புறங்களில் மாத்திரம் காணப்பட்டது. ஆனால் தற்போது கிராம புறங்களிலும், கிராம புற பாடசாலைகளிலும் போதைப் பொருள் பாவனை அதிகரிக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள் பாவனையினை முழுமையாக இல்லாதொழிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

போதைப் பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கு  பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த இலக்கை அடைவது கடினமாகும்.

நாடு தழுவிய ரீதியில் உள்ள 14,222 கிராம சேவகர் பிரிவுகளிலும் சமூக பொலிஸ் சேவை குழுவை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமூக குழுக்களுக்கடையில் தோற்றம் பெறும் முரண்பாடுகள், மற்றும் குற்றச் செயல்கள் ஆகியவற்றுக்கு பொலிஸ் நிலையங்கள் ஊடாக தீர்வை பெற்றுக் கொடுப்பது. சமூக பொலிஸ் சேவை இராஜாங்க அமைச்சின் நோக்கமாகும் என்றார்.

No comments:

Post a Comment