பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பு - அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பு - அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு

நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கொவிட்-19 வைரஸுக்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லுமென சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இலங்கையின் தற்போதைய கொவிட்-19 நிலைமை தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தின் போது எதிர்க்கட்சி பிரதமர கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மேலும் கூறுகையில், நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லாதவாறே கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். அப்படி செய்யாவிட்டால் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு பணம் இல்லாதுபோகும்.

இந்த உலகம் பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொண்டே கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. அதன்படி நாங்களும் செயற்படுவோம். நாங்கள் 60 வீதமானவர்களுக்கு இந்த டிசம்பருக்கு முன்னர் தடுப்பூசிகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment