கொரோனா சடலங்களை கிண்ணியாவில் அடக்க அனுமதி - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 25, 2021

கொரோனா சடலங்களை கிண்ணியாவில் அடக்க அனுமதி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை திருகோணமலை மாவட்டத்தில் அடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவினால் மரணித்த உடல்களை அடக்கம் செய்வதற்கு திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியாவிலுள்ள மஹமாறு பிரதேசத்திலுள்ள இடமொன்றுக்கும் சுகாதார அமைச்சு இன்று முதல் (25-05-2021) அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பில் அண்மையில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அரசியல்வாதிகள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கிண்ணியாவுக்கு விஜயம் செய்து மஹமாரு பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கான இடத்தை பார்வையிட்டுச் சென்றுள்ளனர். 

இதனை தொடர்ந்து அதற்கான அனுமதி தற்போது நேற்று (25) கிடைத்துள்ளதாக சுகாதார பிரிவுக்கு பொறுப்பானவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

நாட்டில் கொரோனா காரணமாக மரணிப்பவர்களின் சடலங்கள் ஓட்டமாவடியில் மாத்திரமே அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் கிண்ணியாவில் அதற்கான இடம் அடையாளப்படுத்தப்பட்டதை தொடர்ந்து உரிய தரப்புகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தேவையேற்படும் போது இங்கும் உடல்கள் அடக்கப்படுமென சுகாதார அமைச்சின் சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad