ஜோ பைடனை முதல்முறையாக சந்திக்கிறார் விளாடிமிர் புதின் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 25, 2021

ஜோ பைடனை முதல்முறையாக சந்திக்கிறார் விளாடிமிர் புதின்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முதல்முறையாக சுவிட்சர்லாந்தில் சந்திக்கிறார்.

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். 

அதிபராக பதவியேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிபர் ஜோ பைடன் தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் முதல்முறையாக சந்திக்க உள்ளனர். 

இச்சந்திப்பு சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் என அந்நாட்டு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

அங்குள்ள ஜெனீவா நகரில் இன்னும் 2 வாரங்களில் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad