அம்பாறை பொது வைத்தியசாலையில் பி.சீ.ஆர் இயந்திரம் பொருத்த நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 25, 2021

அம்பாறை பொது வைத்தியசாலையில் பி.சீ.ஆர் இயந்திரம் பொருத்த நடவடிக்கை

அம்பாறை பொது வைத்தியசாலையில் பி.சீ.ஆர் இயந்திரம் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் கொவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான உயர் மட்டக்கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இதன்போதே இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலங்களில் மக்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள், மரக்கறிகள் என்பவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

அம்பாறை மாவட்டத்தில் விரைவாக கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அதனை மீறி செயற்படுபவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கென அரசினால் வழங்கப்படும் நிவாரணப் பொதியினை விரைவாக வழங்குவதற்கு ஆவண செய்தல்.

கொவிட்-19 சிகிச்சை வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராய்ச்சியுடன் கலந்துரையாடி விரைவாக பெற்றுக் கொடுத்தல் போன்ற தீர்மானங்களும் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளன.

அரச அதிகாரிகள் கொவிட்-19 தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செயற்பட வேண்டும். அப்போதுதான் எமது பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று அதிகரிப்பினை கட்டுப்படுத்த முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad