கொவிட்-19 மாறுபாடு B.1617 (டெல்டா) பரவுவதைத் தடுக்க பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இலங்கை உட்பட ஏழு நாடுகளிலிருந்து பயணிகள் வருகைக்கான தடை உத்தரவை ஜூன் 15 வரை நீட்டித்துள்ளது.
அதன்படி இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான தடையை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிப்பதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் திங்களன்று அறிவித்துள்ளது.
கொவிட்-19 க்கு எதிரான தேசிய பணிக்குழுவின் பரிந்துரையின் பேரில் ஏழு நாடுகளில் இருந்து பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை நீட்டிக்க ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே ஒப்புதல் அளித்தார் என்று ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் ஹாரி ரோக் தெரிவித்தார்.
ஏப்ரல் பிற்பகுதியிலிருந்து மே நடுப்பகுதி வரையிலான தொடர் அறிவிப்புகளில், இந்தியா, நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து மே 31 வரை பயணிகள் நுழைவதற்கு பிலிப்பைன்ஸ் முன்னதாக தடை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment