கொரோனா திரிபுகளுக்கு கிரேக்க அரிச்சுவடியில் பெயர் α, β, γ, δ : நாடுகளின் பெயர்களுக்கு களங்கத்தை தவிர்க்கும் வகையில் WHO முடிவு - News View

About Us

About Us

Breaking

Monday, May 31, 2021

கொரோனா திரிபுகளுக்கு கிரேக்க அரிச்சுவடியில் பெயர் α, β, γ, δ : நாடுகளின் பெயர்களுக்கு களங்கத்தை தவிர்க்கும் வகையில் WHO முடிவு

இந்தியா, பிரித்தானியா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 வைரஸ் திரிபுகளுக்கு, கிரேக்க மொழி மூலம் பெயரிட முடிவு செய்துள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அறிவித்துள்ளது.

இதுவரை, கொரோனா திரிபுகள் கண்டறியப்பட்ட நாட்டை அடிப்படையாகக் கொண்டு, அதையே பெயராக வைத்து அழைக்கப்பட்டு வந்தது.

பிரித்தானியாவில் கடந்த 2020 செப்டெம்பரில் அடையாளம் காணப்பட்ட B.1.1.7 என ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட கொவிட் வைரஸ் திரிபிற்கு Alpha (α அல்பா) எனவும், தென்னாபிரிக்காவில், 2020, மே மாதத்தில் அடையாளம் காணப்பட்ட B.1.351 வைரஸ் திரிபிற்கு Beta (β பீட்டா) எனவும் பிரேசில் திரிபான P1 இற்கு Gamma (Γ/γ காமா) எனவும் இந்தியாவில், கடந்த 2020 ஒக்டோபரில் இனங்காணப்பட்ட B.1.617.1 திரிபிற்கு Delta (Δ/δ டெல்டா) எனவும் பெயரிடப்பட்டுள்ளன.

இவ்வாறு அழைப்பது, குறித்த குறித்த நாடுகளுக்கு களங்கமாக அமைவதாக கருதப்படுவதால் குறித்த முடிவை எடுத்துள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், கொவிட்-19 திரிபுகள் ஆங்கில எழுத்துகள், இலக்கங்களின் கலவைகள் கொண்டு பெயரிடப்பட்டு அழைப்பதனால் ஏற்படும் கடினங்களைக் கருத்திற் கொண்டு, தற்போது கிரேக்க, அரிச்சுவடியில் உள்ள எழுத்துகளை ஒவ்வொரு திரிபுகளுக்கும் பெயரிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வேன் கர்கொவ் ட்விற்றர் பதிவொன்றை இட்டுள்ளதோடு, அதில் அவர், "கொவிட்-19 திரிபுகளின் விஞ்ஞானபூர்வ பெயர்கள் தொடர்ந்தும் அவ்வாறே பேணப்படும் எனவும், அதில் விஞ்ஞான ரீதியான தகவல்கள் காணப்படுவதனாலும் அவை, எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு உதவியாக இருக்கும் என்பதானாலும் அவை தொடர்ச்சியாக பேணப்படும்" எனவும், தெரிவித்துளாளர்.

Α α, Β β, Γ γ, Δ δ, Ε ε, Ζ ζ, Η η, Θ θ, Ι ι, Κ κ, Λ λ, Μ μ, Ν ν, Ξ ξ, Ο ο, Π π, Ρ ρ, Σ σ/ς, Τ τ, Υ υ, Φ φ, Χ χ, Ψ ψ, and Ω ω.

No comments:

Post a Comment