ஒரு இலட்சத்தில் கொரோனா சிகிச்சைக்கான பணியாளர்களை உள்ளீர்க்க ஆலோசனை : மேலும் 50,000 தடுப்பூசிகள் கிடைக்கும் - யாழ் வைத்தியசாலைக்கான நேரடி விஜயத்தில் அங்கஜன் எம்.பி - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

ஒரு இலட்சத்தில் கொரோனா சிகிச்சைக்கான பணியாளர்களை உள்ளீர்க்க ஆலோசனை : மேலும் 50,000 தடுப்பூசிகள் கிடைக்கும் - யாழ் வைத்தியசாலைக்கான நேரடி விஜயத்தில் அங்கஜன் எம்.பி

யாழ் மாவட்ட போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம் (31) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் (பா.உ) கொரோனா விடுதி மற்றும் கொரோனா அவசர சிகிச்சை விடுதி என்பவற்றை பார்வையிட்டதுடன் நோயளிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் அறுவுறுத்தல்களை ஒலிவாங்கி மூலம் தெரிவித்தார். 

மேலும் வைத்தியசாலை பணிப்பாளருடனும் கலந்துரையாடலை மேற்கொண்டு வைத்தியசாலையில் கோவிட்-19 நோய் நிலமை தொடர்பிலும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார். 

கோவிட்-19 விடுதிகளில் சுகாதார ஊழியர்களுக்கும் வைத்தியர்களுக்கும் சுகாதார தொண்டர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த காலத்தில் அதிகமாக இருந்தபோதும் இப்போது பயணத்தடை காரணமாக குறைந்து வருகிறது .

தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் சிலிண்டர்கள், ஒட்சிசன் தாங்கி தேவையாக உள்ளது. அவற்றை சுகாதார அமைச்சுடன் பேசி பெற்றுக் கொடுக்க நாம் முயற்சிகளை எடுக்கவுள்ளோம். ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் கொரோனா சிகிச்சைக்கான பணியாளர்களை உள்ளேடுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் வருகை தந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தடுப்பூசி போடும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு தெரிவித்ததுடன் முதல்கட்ட 50,000 தடுப்பூசி போடப்பட்டு முடிவடைந்தால் அடுத்த கட்டமாக மேலும் 50,000 தடுப்பூசி அனுப்ப முடியும் என தெரிவித்திருந்தார்.

ஆகவே எவ்வளவு வேகமாக இந்த முதல்கட்ட தடுப்பூசியை நாம் போட்டு முடிக்கிறோமோ அந்தளவு விரைவாக அடுத்த கட்ட தடுப்பூசிகள் எமக்கு கிடைக்கும்

குறிக்கப்பட்ட எல்லையில் 52 வீதமான மக்கள் நேற்று யாழில் கொரோனாவுக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

மக்களுக்கான தேவையற்ற பயத்தைப் போக்க தெளிவூட்டல்களை வழங்க வேண்டும். மக்கள் பிரதிநிதியான நாங்கள் தெளிவூட்டல்களை செய்வதோடு அரச உத்தியோகத்தர்களும் அதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.

முதல்கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு அடுத்த கட்ட தடுப்பூசி போடுவதற்கு 12 வார கால இடைவெளி உள்ளது. அந்த சீரான இடைவெளியில் இரண்டாவது தடுப்பூசியும் பொதுமக்களுக்கு போடப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad