மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்வரும் பத்தாம் திகதிக்குள் தடுப்பூசிகள் : கொரோனாவால் உயிரிழந்த உடல்களை வைத்து அரசியல் செய்பவர்கள் இருக்கின்றார்கள் - சிவநேசதுரை சந்திரகாந்தன் - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்வரும் பத்தாம் திகதிக்குள் தடுப்பூசிகள் : கொரோனாவால் உயிரிழந்த உடல்களை வைத்து அரசியல் செய்பவர்கள் இருக்கின்றார்கள் - சிவநேசதுரை சந்திரகாந்தன்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்வரும் பத்தாம் திகதிக்குள் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் ஒரு பகுதியை கொரோனா சிகிச்சை பிரிவாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா மூன்றாவது அலை அதிகரித்து காணப்படும் நிலையில் சுகாதார பிரிவில் திறம்பட சேவையாற்றி வருகின்றனர். நாட்டை காப்பாற்ற நாம் எல்லோரும் எமது பணியை சரியான மேற்கொள்ள வேண்டும். 

எமது நாட்டை ஜனாதிபதி பொறுப்பேற்ற காலம் தொடக்கம் கொரோனா தொற்று ஆரம்பித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலும் கொரோனா தொற்றோடு நடாத்தினோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை விட மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதில் கரிசனை கொண்டு வருகின்றோம்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைத்து அரசியல் செய்பவர்கள் இருக்கின்றார்கள். அதனை நீங்கள் மறந்துவிட வேண்டாம். 

குறிப்பாக எமது அரசியல் எதிரிகள் இந்த நாடு பொருளாதாரத்தில் இன்னமும் வீழ்ச்சியடை வேண்டும். வைத்தியர்களுக்கும் கொரோனா தொற்று மரணங்கள் வருகின்ற பொழுது அரசாங்கத்தினை விமர்சிப்பதற்கும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனை நீங்கள் மிகவும் பக்குவமாக கையாள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்வரும் பத்தாம் திகதிக்குள் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன். இருபத்தையாயிரம் தடுப்பூசிகள் கிடைக்கும் பட்சத்தில் மாவட்டத்திலுள்ள சுகாதார துறையினர், அரச அதிகாரிகள், தொழில் செல்வோருக்கு விரைவாக செலுத்த வேண்டும். 

வருகின்ற மழை காலத்திற்கு முன்னர் ஸ்திரமான நிலையிமைக்கு மாவட்டத்தினை கொண்டு வந்தால் மாத்திரம் மக்களை பட்டினியில்லாத நிலைக்கு கொண்டு வர முடியும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad