மூன்று குழந்தைகளுக்கு அனுமதியளித்தது சீனா - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

மூன்று குழந்தைகளுக்கு அனுமதியளித்தது சீனா

கடுமையான இரண்டு குழந்தைகள் கொள்கையினை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக ஒவ்வொரு தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் வரை இருக்க அனுமதிப்பதாக சீனா அறிவித்துள்ளது.

இந்த மாற்றத்திற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அனுமதி அளித்துள்ளார் என மாநில சின்ஹுவா ஊடகம் தெரிவித்துள்ளது.

சீனாவில், ஒரு தசாப்தத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் சனத் தொகை கணக்கெடுப்பின்படி, சனத் தொகை மிக மெதுவான வேகத்தில் வளர்ச்சியடைவதைக் காட்டிய பின்னர் குறித்த தீர்மான் எடுக்கப்பட்டுள்ளது.

இது தம்பதியினருக்கு அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அதிகரிக்கவும் மக்கள் தொகை வீழ்ச்சியைத் தவிர்க்கவும் பெய்ஜிங்கில் அழுத்தம் கொடுத்தது.

இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சீனாவின் சனத் தொகை தொகை கணக்கெடுப்பு, கடந்த ஆண்டு சுமார் 12 மில்லியன் குழந்தைகள் பிறந்தன என்பதை காட்டுகிறது.

2016ஆம் ஆண்டில் இருந்த 18 மில்லியனை ஒப்பிடும்போது இது கணிசமான சரிவு. கூடவே 1960 களுக்குப் பிறகு பதிவான மிகக் குறைவான எண்ணிக்கை இதுவாகும்.

சனத் தொகை கணக்கெடுப்பு தரவு முடிவுகள் வெளியான பின்னர் சீனா தனது குடும்பக் கொள்கை விதிகளை தளர்த்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad