42 சந்தேகநபர்கள் தொடர்பான சாட்சியங்களை உறுதிப்படுத்தவும், 5 பேர் தொடர்பான விசாரணைகள் முழுமையில்லை - சட்டமா அதிபரிடமிருந்து 130 பக்க அறிக்கை பொலிஸ்மா அதிபருக்கு - News View

About Us

About Us

Breaking

Saturday, May 15, 2021

42 சந்தேகநபர்கள் தொடர்பான சாட்சியங்களை உறுதிப்படுத்தவும், 5 பேர் தொடர்பான விசாரணைகள் முழுமையில்லை - சட்டமா அதிபரிடமிருந்து 130 பக்க அறிக்கை பொலிஸ்மா அதிபருக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில கைது செய்யப்பட்ட 'A' குழு சந்தேகநபர்கள் 42 பேர் தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்களை எழுத்துபூர்வமாக உறுதிப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் மாஅதிபருக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் 130 பக்க அறிக்கையொன்றை சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக, சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன, தெரிவித்தார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் 5 பேர் மீதான விசாரணைகள் முழுமையடையவில்லை எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிஐடி விசாரணை நிறைவு பெறாததால் தமது பதவிக் காலத்துக்குள் ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாமல் போயுள்ளதாக சட்டமா அதிபர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

அவ்வாறு விசாரணைகள் முழுமை பெறாமை தொடர்பில் தாமதம் உள்ளதா என்பதையும் அதற்கான காரணங்களை கண்டறியுமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

No comments:

Post a Comment