பயணிகள் வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது - 3 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

பயணிகள் வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது - 3 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம்  நேற்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற வேன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முசாபராபாத் நகர் அருகே விபத்துக்குள்ளானது. திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் வேன் கடுமையாக சேதமடைந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad