இரத்தினபுரி பிரதேசத்தில் கொள்ளையர்கள் ஐவர் கைது : 25 முச்சக்கர வண்டிகள், 5 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

இரத்தினபுரி பிரதேசத்தில் கொள்ளையர்கள் ஐவர் கைது : 25 முச்சக்கர வண்டிகள், 5 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

(எம்.மனோசித்ரா)

இரத்தினபுரி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய 25 முச்சக்கர வண்டிகள், 5 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அண்மையில் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் ஐவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த பிரதேசத்தில் கொள்ளையிடப்பட்ட 13 முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று சனிக்கிழமை இவர்களிடம் மீண்டும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய மேலும் 12 முச்சக்கர வண்டிகளும், 5 மோட்டார் சைக்கிள்களும் மேலும் சில வாகனங்களும் மீட்க்கப்பட்டுள்ளன. இவை கொள்ளையிடப்பட்ட வாகனங்கள் என்று தெரியவந்துள்ளது. அதற்கமைய இதுவரையில் 25 முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே யாருடையதேனும் முச்சக்கர வண்டிகள் கொள்ளையிடப்பட்டிருந்தால் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அது தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad