யாழில் பிறந்தநாள் கொண்டாடிய 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 15, 2021

யாழில் பிறந்தநாள் கொண்டாடிய 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கும் போது, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வடமராட்சி பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பயண தடை அமுலில் உள்ள போது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

அதனை உறுதிப்படுத்திக் கொள்ள நெல்லியடி பொலிஸாருடன் சுகாதார பிரிவினர் அவ்விடத்திற்கு சென்றிருந்த போது, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர்.

அந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடியவரின் தொலைபேசியில் காணப்பட்ட கொண்டாட்ட படங்களின் அடிப்படையில் அதில் உள்ள 15 பேரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment