இலங்கையில் ஒட்சிசன் கையிருப்பில் உள்ளதாக விநியோக நிறுவனங்கள் தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

இலங்கையில் ஒட்சிசன் கையிருப்பில் உள்ளதாக விநியோக நிறுவனங்கள் தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)

எதிர்வரும் 6 மாதங்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான ஒட்சிசன் கையிருப்பில் உள்ளதாக வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் விநியோகிக்கும் பிரதான நிறுவனங்கள் சுகாதார அமைச்சிற்கு அறிவித்துள்ளன.

குறித்த நிறுவனங்களிடம் காணப்படும் ஒட்சிசன் அளவு எவ்வளவு என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கேட்கப்பட்டமைக்கமைய அவை இதனை அறிவித்துள்ளன.

அத்தோடு தற்போது வைத்தியசாலைகளில் காணப்படும் ஒட்சிசன் அளவு குறித்து துரிதமாக அறிவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் சகல வைத்தியசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் பரவல் நிலைமையைக் கருத்திற் கொண்டு அவசர நிலைமை ஏற்பட்டால் ஒட்சிசன் தேவையின் அளவு அதிகரிக்கும் என்பதால், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad