தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொரோனா தொற்றாளர்கள் - வீதியை பயன்படுத்துவோருக்கான அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 28, 2021

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொரோனா தொற்றாளர்கள் - வீதியை பயன்படுத்துவோருக்கான அறிவிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெயியேறல் பகுதி, மறு அறிவித்தல் வரை இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் மூடப்பட்டுள்ளது.

கொட்டாவ வெயியேறல் பகுதியில் பணிப்புரிந்த 3 ஊழியர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனாலும் அம்பியூலன்ஸ் மற்றும் பேருந்துகள் செல்வதற்கு மாத்திரம் கொட்டாவ வெயியேறல் பகுதி திறக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக பயணம் மேற்கொள்பவர்கள் கஹதுடுவ மற்றும் அத்துருகிரிய வெளியேறல் பகுதிகளை பயன்படுத்துமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.

மேலும் கொட்டாவ நுழைவாயில் ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் செல்ல முடியும். ஆனால் கட்டணம் அறவிடப்படமாட்டாது எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment