"கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரை கொலை செய்து விட்டோம்" - கணவன், மனைவி பொலிஸ் நிலையத்தில் சரண் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 1, 2021

"கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரை கொலை செய்து விட்டோம்" - கணவன், மனைவி பொலிஸ் நிலையத்தில் சரண்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரை கொலை செய்துவிட்டதாக கூறி கணவன், மனைவி இருவர் நேற்றுமுன்தினம் (30) சீகிரிய பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இலங்கை விமானப்படை வீரரரும் அவருடைய மனைவியும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, விமானப்படை வீரரின் மனைவிக்கும் கொலை செய்யப்பட்ட நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காதல் தொடர்பு இருந்ததாக கூறப்படுகின்றது. 

இதனால் விமானபடை வீரர் மெல்சீரிபுர பிரதேசத்திலிருந்து சீகிரிய பிரதேசத்திற்கு வாடகைக்கு வீடு ஒன்றை பெற்றுக் கொண்டு பிள்ளைகளுடன் தங்கியுள்ளார். 

எனினும் கொலை செய்யப்பட்ட நபர் தொடர்ந்து அவர்களை தொந்தரவு செய்து வந்துள்ளார். இத்தகையதொரு பின்னணியில்தான் இக்கொலை சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இச்சம்பவத்தில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். கொலை செய்யப்பட்ட நபர் தங்கியிருந்ததாக கூறப்படும் இடத்தில் பொலிஸார் பரிசோதனைகளை மேற்கொண்டனர். 

அதற்கமைய அங்கிருந்து 200 மீற்றர் தொலைவிலிருந்த சீகிரிய பிரதான வீதிக்கு அருகாமையிலிருந்து கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டது.

இதனையடுத்து உயிரிழந்தவரின் மனைவி மற்றும் உறவினர்கள் அவ்விடத்திற்கு வர பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இதன்போது கொலை செய்யப்பட்ட நபருக்கும் விமானப்படை வீரரின் மனைவிக்கும் இடையில் நீண்ட காலமாக காதல் தொடர்பு இருந்து வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சீகிரியா பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad