வலிப்பு நோயால் வயோதிபர் ஆற்றுக்குள் விழுந்து மரணம் - ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 1, 2021

வலிப்பு நோயால் வயோதிபர் ஆற்றுக்குள் விழுந்து மரணம் - ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சம்பவம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

வலிப்பு நோயாளியான வயோதிப ஆணொருவர் வலிப்புக் காரணமாக ஆற்றுக்குள் விழுந்த நிலையில் மரணித்து விட்ட சம்பவமொன்று ஏறாவூர் பொலிஸ் பிரிவின் சந்தனமடு ஆற்றுப் பகதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை 31.03.2021 இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் சித்தாண்டி முருகன் கோயில் வீதியை அண்டி வசிக்கும் கணபதிப்பிள்ளை விநாயகம் (வயது 60) என்பவரே ஆற்றில் மூழ்கிப் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கூலித் தொழிலாளியான இவர் தோட்ட வேலைக்காகச் சென்று விட்டு வேலை முடிந்ததும் வீடு செல்வதற்காக ஆற்றோரமாக நடந்து வரும்போது தீடீரென ஏற்பட்ட வலிப்பின் காரணமாக ஆற்றுக்குள் விழுந்து மூழ்கியுள்ளார்.

பின்னர் உறவினர்கள் இந்த விடயத்தை அறிந்து பொலிஸாருக்கு அறிவித்ததின் பேரில் சடலம் மீட்கப்பட்டு வியாழக்கிழமை 01.04.2021 உடற்கூராய்வப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad