திருகோணமலை பேருந்து நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய இரும்புப் பெட்டி! - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

திருகோணமலை பேருந்து நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய இரும்புப் பெட்டி!

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரும்பு பெட்டியொன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதால், இன்று (திங்கட்கிழமை) காலை அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் மூதூர் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளுக்கான பேருந்துகள் தரித்து நிற்கும் இடத்திற்கு அருகாமையில் குறித்த பெட்டியானது கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

அதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. விசேட அதிரடிப் படையினரது குண்டு செயலிழக்கும் அணியினர் சம்பவ இடத்திற்குச் சென்று பலத்த பாதுகாப்புடன் குறித்த பெட்டியைத் திறந்து பார்த்தனர்.

இந்த நிலையில், குறித்த பெட்டியானது இராணுவ சிப்பாய் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad