யாழில் காணியை அளவிடும் நடவடிக்கை மக்களின் எதிர்ப்பையடுத்து இடைநிறுத்தம்! - News View

About Us

About Us

Breaking

Monday, April 5, 2021

யாழில் காணியை அளவிடும் நடவடிக்கை மக்களின் எதிர்ப்பையடுத்து இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் வடக்கில் மக்களுக்குச் சொந்தமான காணியை அளவிடும் நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் 52ஆவது படையணியின் தலைமையகம் அமைப்பதற்காக சுமார் 40 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு அளவீடுசெய்ய முயற்சிக்கப்பட்டது.

இதன்போது, ஏ-9 பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் இன்று (5) ஈடுபட்ட நிலையில் அளவீட்டு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன்போது போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் மக்களுடன் இணைந்து அரசியல்வாதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, நில அளவைத் திணைக்களத்தின் செயற்பாடுகளை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் விரைவில் அவர்களின் அலுவலகத்தை முடக்கிப் போராட்டம் நடத்துவோம் என்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

அத்துடன், தன்மானத்தை இழந்து வாழ நாங்கள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், இராணுவ முகாமுக்கு முன்னால் போராட்டம் நடத்தியுள்ள நிலையில் இராணுவம் எம்மை சுட விரும்பினால் சுடலாம் எனவும் எதற்கும் மானமுள்ள தமிழன் அஞ்சமாட்டான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment