உப தபால் அலுவலகங்களின் சேவை நேரத்தில் மாற்றம் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

உப தபால் அலுவலகங்களின் சேவை நேரத்தில் மாற்றம்

கொரோனா தொற்று நிலைமையினால் உப தபால் அலுவலகங்களை திறக்கும் காலம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், உப தபால் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாத்திரமே திறக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், உப தபால் அலுவலகங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டன.

இதேவேளை, சனிக்கிழமைகளில் உப தபால் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாத்திரமே திறக்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad