முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு - News View

Breaking

Post Top Ad

Sunday, April 25, 2021

முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

இன்றைய (25) ஐந்தாவதும் இறுதி நாளான ஆட்டத்தை 3 விக்கெட்டுகளை இழந்து 512 ஓட்டங்கள் எனும் வலுவான நிலையில் ஆரம்பித்த இலங்கை அணி, முதலாவது விக்கெட்டாக 166 ஓட்டங்களை பெற்றிருந்த தனஞ்சய டி சில்வாவை பறிகொடுத்த (535/4) நிலையில், அடுத்து 244 ஓட்டங்களை குவித்திருந்த திமுத் கருணாரத்னவை இழந்தது (544/5). இந்த இரு விக்கெட்டுகளையும் தஸ்கின் இஸ்லாம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, 8 விக்கெட்டுகளை இழந்து 648 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

107 ஓட்டங்கள் பின்னிலையில் பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நிலையில், இன்று பிற்பகல் அளவில் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தேநீர் இடைவேளையின் போது, மழையின் குறுக்கீட்டால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போட்டி வெற்றி தோல்வியின்றி சமனிலையில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

போட்டியின் நாயகனாக திமுத் கருணாரத்ன தெரிவானார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad