அரசாங்க தகவல் திணைக்களம் என்ற ரீதியில் சரியான தகவல்களை சரியாக மக்கள் மயப்படுத்தும் செயற்பாடு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் பணியை நிறைவேற்றுவதற்கு ஆகக்கூடிய வகையில் முயற்சிக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றபோது சிரேஷ்ட ஊடகவியலாளர்களிடம் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்காக சிறந்த நீதியான மற்றும் நீதியை மதிக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக செயற்படுங்கள், இதற்காக சரியான தகவல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் முன்னோக்கிய பயணத்தில் முக்கிய சாதனமாக தகவல் செய்தி மற்றும் அறிவு ஆகியவற்றை குறிப்பிட முடியும். அறிவு மற்றும் தகவல் தொடர்பாடல் முகாமைத்துவம் செய்யும் குரல் நாட்டையும் பொது மக்களையும் நிர்வகிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
சரியான தகவல்களின் மூலம் பொதுமக்களை ஊக்குவிக்கும் அளவுக்கு பொதுமக்களும் சரியான தகவல்களை பெற்றுக் கொள்வார்கள். இந்த சரியான தகவல்களின் ஊடாக செயற்படும் அரசாங்கத்திற்கு பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் ரீதியிலான கொள்கையை பெற்றுக் கொள்வதற்கான ஆற்றல் இருப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இதன் மூலமாக சரியான தகவல்களை வழங்கி பொதுமக்களை தெளிவுப்படுத்தும் பொறுப்பை சிறந்த முறையில் மேம்படுத்துவதற்கு செயல்படுமாறு தாம் அனைவரையும் கேட்டுக் கொள்வதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.மொஹான் சமரநாயக்க மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment