கிளிநொச்சியில் 5 உடும்புகளுடன் ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, April 19, 2021

கிளிநொச்சியில் 5 உடும்புகளுடன் ஒருவர் கைது

வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப் பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிக்காக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போது குறித்த வீட்டினை சுற்றி வளைத்த திணைக்கள அதிகாகரிகள் ஐந்து உடும்புகளுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாகரிகள் இன்று (19) முற்படுத்திய போது அவரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்த நீதி மன்றம் வழக்கினை எதிர்வரும் 10.05.2021 அன்று தவணையிட்டுள்ளது. 

அத்தோடு ஐந்து உடும்புகளையும் பாதுகாப்பாக காட்டில் விடுமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது.

இறைச்சிக்காக வேட்டையாடப்பட்ட ஐந்து உடும்புகளும் பாதுகாப்பாக சுண்டிக்குளம் பறவைகள் சரணாலய காட்டில் அதிகாரிகளால் விடப்பட்டது.

No comments:

Post a Comment