சூயஸ் கால்வாய் விவகாரத்தில் எகிப்தின் முதல் பெண் கப்பல் கேப்டனுக்கு எதிராக போலி குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Sunday, April 4, 2021

சூயஸ் கால்வாய் விவகாரத்தில் எகிப்தின் முதல் பெண் கப்பல் கேப்டனுக்கு எதிராக போலி குற்றச்சாட்டு

எகிப்தின் முதல் பெண் கப்பல் கேப்டனான மார்வா எல்செல்தாருக்கு எதிராக சூயஸ் கால்வாயூடான போக்குவரத்தினை தடுத்து நிறுத்தியதாக போலி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் உலகின் மிக மூலோபாய கப்பல் வழித்தடங்களில் ஒன்றான சூயல் கால்வாயின் குறுக்கே எவர் கிவன் என்ற கொள்கலன் கப்பல் பற்றிய தகவல்கள் வெளியானபோது 29 வயதான எல்செலெதார் மத்திய தரைக் கடல் துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியாவில் நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் கடமையில் இருந்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள எல்செலெதார், இந்த தகவலை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இந்த துறையில் நான் ஒரு வெற்றிகரமான பெண் என்பதால் அல்லது நான் எகிப்தியனாக இருப்பதால் இலக்கு வைக்கப்படலாம் என்று நான் உணர்ந்தேன் என்றார்.

உலகின் பெண்கள் கடற்படைகளில் 2 சதவீதத்தில் எல்செல்தார் உள்ளார்.

சூயஸ் கால்வாயில் பாரிய கொள்கலன் கப்பல் சிக்கியதன் விளைவாக உலகம் முழுவதும் வர்த்தகத்தை பாதித்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு வாரமாக மீட்பு முயற்சிகள் நடந்து கொண்டிருந்ததால், 350 க்கும் மேற்பட்ட கப்பல்கள் சூயஸ் கால்வாயைக் கடக்கக் காத்திருந்தன.

இந்த கப்பல் மார்ச் 29 அன்று விடுவிக்கப்பட்டது, ஏப்ரல் 3 ஆம் திகதி போக்குவரத்து தடை பெருமளவில் அகற்றப்பட்ட பின்னர் உலக வர்த்தகம் மீண்டும் தனது பாதையைத் தொடங்கியது.

No comments:

Post a Comment