(செ.தேன்மொழி)
நாவுல பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி வெடி மருந்துகளை கொண்டு சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவுல - எலஹெர வீதியில் நேற்று சனிக்கிழமை சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை சோதனைக்குட்படுத்தியபோதே வெடி மருந்துகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 24 - 43 ஆகிய வயதுடைய நான்கு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 3 கிலோ 230 கிராம் அமோனியா, 135 கிராம் வோடர் ஜெல் , 20 கிராம் வெடி மருந்து , 14 டெட்டனேட்டர்கள் உட்பட பல்வேறு வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாவுல பொலிஸார் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment