பிரதமர் நரேந்திர மோடியின் காதில் முஸ்லிம் இளைஞர் கூறியது என்ன? - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 13, 2021

பிரதமர் நரேந்திர மோடியின் காதில் முஸ்லிம் இளைஞர் கூறியது என்ன? - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி கடந்த 2ம் தேதி சோனார்பூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகொப்டரில் புறப்படும்போது, முஸ்லிம் இளைஞர் ஒருவர், பிரதமர் மோடியை சந்தித்தார். 

அப்போது அவரது காதில் இளைஞர் எதையோ கூற, பிரதமர் மோடி இளைஞரின் தோளை அரவணைத்து உன்னிப்பாகக் கேட்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

யார் அந்த இளைஞர், பிரதமர் மோடியிடம் அவர் என்ன கூறினார் என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் ஓங்கி ஒலித்தது.

புகைப்படம் தொடர்பாக ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி, எதிர்மறையான விமர்சனத்தை முன்வைத்தார். அந்த இளைஞர் முஸ்லிம் அல்ல. மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலுக்காக பாஜக நடத்திய நாடகம் இது என்றார்.

இதனிடையே முன்னணி ஊடகங்களின் நிருபர்கள், விசாரணை நடத்தி அந்த இளைஞரை தேடி கண்டுபிடித்தனர். அந்த இளைஞர் கொல்கத்தாவின் மீடியாபுரூஸ் பகுதியை சேர்ந்த ஜுல்பிகர் அலி (38) என்பது தெரியவந்தது. 

அவர் நிருபர்களிடம் கூறியதாவது ஏப்ரல் 2ம் திகதி சோனார்பூரில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 40 விநாடிகள் மட்டுமே பிரதமருடன் பேசினேன். இது 40 ஆண்டுகள் வரை என் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருக்கும். 

எனது பெயரை பிரதமர் கேட்டறிந்தார். எனக்கு ஏதாவது வேண்டுமா என்று அன்போடு கேட்டார். எனக்கு எம்எல்ஏ சீட் வேண்டாம், கவுன்சிலர் சீட் கூட வேண்டாம். உங்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும். அதுதான் எனது பேராசை என்று கூறினேன். அவர் உடனடியாக புகைப்பட நிபுணரை அழைத்து புகைப்படம் எடுக்க செய்தார்.

நான் முஸ்லிம். கடந்த 2014ம் ஆண்டு முதல் பாஜகவில் உள்ளேன். தற்போது தெற்கு கொல்கத்தா மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவராக பதவி வகிக்கிறேன். இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவையாற்ற விரும்பினேன். அந்த வாய்ப்பை இழந்துவிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment