தமிழகத்தில் இன்று இரவு 7 மணியுடன் தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்கு வந்தன. அதன் பின்னர், கருத்து கணிப்பு வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 7 மணிக்கு முன்னதாக, பிரசாரத்திற்காக வந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும். அதேபோன்று மது பானக்கடைகளும் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகின்றன.
தமிழகத்தில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் தொடங்குகின்றன.
இதற்காக, மொத்தம் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் தயார் படுத்தப்படுகின்றன.
வாக்குப்பதிவுக்காக ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில், தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்துள்ளன
நாளை காலை முதல் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அழியாத அடையாள மை உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்கள் அனுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment