99 ஆவது தேசிய மெய்வல்லுனர் வல்லவர் போட்டி திட்டமிட்டபடி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும் - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

99 ஆவது தேசிய மெய்வல்லுனர் வல்லவர் போட்டி திட்டமிட்டபடி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

99 ஆவது தேசிய மெய்வல்லுனர் வல்லவர் போட்டி ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும் என இலங்கை மெய்வல்லுனர் சங்தத்தின் உப தலைவர் ஜீ.எல்.எஸ். பெரேரா அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டார்.

அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “99 ஆவது தேசிய மெய்வல்லுனர் வல்லவர் போட்டி ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும். இப்போட்டிக்கான விண்ணப்பங்கள் மே மாதம் 10 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

இளையோருக்கான தேசிய மெய்வல்லுனர் வல்லவர் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி முதல 20 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும், இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் முதலாம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 99 ஆவது தேசிய மெய்வல்லுனர் வல்லவர் போட்டி மற்றும் இளையோர் தேசிய மெய்வல்லுனர் வல்லவர் போட்டி ஆகியனவற்றின் களப் போட்டிகள் (FIELD EVENTS) தியகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் நடைபெறும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad