பனிப்பாறை உருகும் வேகம் அதிகரிப்பு - பெரும் ஆபத்தில் சிக்கியுள்ள கடற்கரையோர நகரங்கள் - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

பனிப்பாறை உருகும் வேகம் அதிகரிப்பு - பெரும் ஆபத்தில் சிக்கியுள்ள கடற்கரையோர நகரங்கள்

உலகின் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து நேச்சர் இதழில் வெளியான ஆய்வறிக்கையில், பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துள்ளதால் கடற்கரையோர நகரங்கள் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நாசா நடத்திய ஆய்வில் கிரீன்லாந்து மற்றும் அண்டார்க்டிகா தவிர்த்து ஏனைய பகுதியில் ஆண்டுக்கு சுமார் 267 ஜிகா தொன் அளவிற்கு பனிப்பாறைகள் உருகியது தெரியவந்துள்ளது.

தற்போது இந்த அளவு அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்ற காரணத்தினால் பனி உருகுவதாகவும், இதனைக் கட்டுப்படுத்தாவிட்டால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ஒட்டு மொத்த கடல் மட்ட உயர்வு 21 வீதமாக இருப்பது அல்லது ஆண்டுக்கு 0.74 மில்லி மீற்றர் கடல் மட்்ட உயர்வுக்கு இந்த பனிப்பாறை உருகுவது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad